சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு – மர்ம ஆசாமி கைவரிசை..!

கோவை பி.என்.புதூர், கோகுலம் காலணியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சன்மதி ( வயது 25) நேற்று இவர் கோகுலம் காலனி 3 -வது வீதியில் நடந்து சென்றார்.அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒரு ஆசாமி திடிரென்று இவர் மீது பாய்ந்து  கழுத்தில் கிடந்த 9 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சன்மதி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.