அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்த பெண்ணின் செயின் திருட்டு..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள விரிசன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 50) இவர் உக்கடம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆவாரம்பாளையம் செல்வதற்காக அரசு டவுன் பஸ் ஏறினார். டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப் அருகே சென்றதும் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து ராஜகுமாரி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.