சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவைச் சென்றடைய முக்கியமான 10 படிநிலைகளைக் கடந்தாக வேண்டும். இந்த 10 படிநிலைகளை முக்கியமான மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கலாம்…
முதல் பகுதி
படிநிலை 1 – புவியை மையமாக வைத்து விண்கலம் சுழலும் காலப் பகுதி. இது மூன்று நிலைகளை உள்ளடக்கியது.
அவையாவன:-
(அ) விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு முந்தைய தயாரிப்புப்பணிகள்.
(ஆ) 2023 ஜூலை 14ஆம் நாள் விண்கலத்தை விண்ணில் ஏவுதல்
(இ) விண்கலத்தை அது புவியை சுற்றிவரும் பாதையில் செலுத்துதல்
பகுதி 2,படிநிலை 2 – விண்கலத்தை நிலவைச் சுற்றும் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்றுதல்
பகுதி 3 – நிலவை மையமாக வைத்து விண்கலம் சுழலும் காலப் பகுதி. இதனைப் பின்வரும் படிநிலைகளாகப் பகுக்கலாம்.
i. நிலவைச் சுற்றவேண்டிய சுற்றுவட்டப்பாதையில் விண்கலத்தைச் செலுத்துதல்.
ii. நிலவை நோக்கிய விண்கலத்தின் பயணம்
iii. நிலவில் இறங்கவேண்டிய பகுதி விண்கலத்தில் இருந்து பிரிதல்
iv. விண்கலத்தின் வேகத்தைக் குறைத்தல்
v. நிலவில் விண்கலம் இறங்குவதற்கு முந்தைய காலப் பகுதி.
vi. நிலவில் விண்கலம் இறங்கும் நேரம்
vii. லேண்டரும் ரோவரும் இயங்கும் நேரம்
viii. விண்கலத்தின் உந்துவிசைப் பகுதி நிலவிலிருந்து 100 கிமீ தூரத்தில் நிலவைச் சுற்றி வருதல்