சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கடந்த 10.04.2023 அன்று
தமிழ்நாடு சட்டமன்றத்தில், சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவுமுறை மற்றும் உணவின் அளவினை, ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி நேற்று (05.06.2023) தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
புழல் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இப்புதிய உணவுமுறை மற்றும் உணவின் அளவினை மாற்றியமைக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இவ்விழாவில் DGP (Prisons) அமரேஷ் பூஜாரி, ஐபிஎஸ், இரா. கனகராஜ், சிறைத்துறை DIG (HQ), ஆ.முருகேசன், சிறைத்துறை DIG, சென்னை சரகம்,சிறை கண்காணிப்பாளர்கள் இரா. கிருஷ்ணராஜ் மற்றும் நிகிலா நாகேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.