கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29), குமரி மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் பணியாற்றி உள்ளார்.
சில இளம்பெண்களுடன் இவர் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவாலயப் பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ள இந்த பாதிரியார், அங்கும் தேவாலயங்களுக்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதை அறிந்த பெனடிக்ட் ஆன்றோ காவல் துறைக்கு பயந்து தலைமறைவானார். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தேடுதல் வேட்டையில் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் பதுங்கி இருந்த பெனடிக்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தான் யாரையும் மிரட்டவும் இல்லை, அச்சுறுத்தவும் இல்லை. பெண்கள் என்னிடம் நண்பர்களாக பழகினார்கள். அந்த பழக்கத்தில்தான் வாட்ஸ் ஆப் சாட்டிங் செய்தோம் என்று அவர் கூறினார். மேலும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் பெண் ஒருவரை தன்னுடைய முன்னாள் காதலி என்று குறிப்பிட்ட பெனடிக்ட் ஆன்றோ அவரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றும் இருவரும் விருப்பப்பட்டு பிரிந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஆபாச வீடியோ கால் சாட்டி குறித்து விசாரணை நடத்தியபோது பெனடிக்ட் ஒரே குடும்பத்தில் உள்ள தாய், மகள்,மருமகள் ஆகிய மூவருடன் சாட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. அது குறித்தான விபரங்களை கேட்ட போது பென் டிக்ட் எந்த வித தயக்கமும் இன்றி போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். இந்த விசாரணையானது சுமார் 15 நிமிடம் நீடித்திருக்கிறது.
இந்த நிலையில் பெனடிக்ட்டை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் நாகர்கோயில் சிறையில் அடைத்தனர். பெனடிக்ட் ஆன்றோ கொடுத்த தகவல்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிரியாருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிடம் போலீசார் தகவல்களை கேட்டு பெற்றனர். அந்த பெண் சமூகவலைதளங்களில் பரவும் தன்னுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.