சென்னை ரயில் நிலையத்தில் குறைந்த விலையில் கஞ்சா- பாய்ந்து பிடித்த போலீசார்.!!

சென்னை: சமீப காலமாக தமிழக ரயில்வே போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப் பொருட்கள் மாத்திரைகள் கஞ்சா குட்கா போதை ஊசிகள் அடியோடு ஒழித்திட 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் செயல்பட்டு வருகின்றனர் . சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துனை சூப்பிரண்ட் கர்ணன் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி காவலர் வெங்கடேசன் ஆகியோர் 4 வது பிளாட்பார்மில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதில் வந்து இறங்கிய பயணிகளை போலீசார் சோதனை போட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது குற்றவாளி கஞ்சா வியாபாரி இப்ராஹிம் கான் வயது 24. தகப்பனார் பெயர் அதர் அலி கான் கட்வார் கைசா போஸ்ட் புர்பா பர்தமான் மேற்கு வங்க மாநிலம் இவன் வந்து கொண்டிருந்தான் . ஆனால் போலீசை பார்த்ததும் பையோடு பின்னோக்கி ஓடினான். போலீசார் அவனை மடக்கி பிடித்து அவன் வைத்திருந்த பையை சோதனை போட்டனர். அதில் 4 கிலோ கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடித்தனர். அதிக லாபம் சம்பாதிக்க தெலுங்கானா மாநிலத்தில் குறைந்த விலைக்கு வாங்கி வந்ததாக கூறினான். பிடிபட்ட கஞ்சாவை அடையாறில் உள்ள சிறப்பு படையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். குற்றவாளியை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..