சென்னை மடிப்பாக்கத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி ராபின் ( வயது 40 )என்பவர் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் பாதுகாப்பு கருதி 20 22 ஆம் ஆண்டிலிருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் ராபினுக்கு கோர்ட்டின் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் ராவின் கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் .பின்னர் கோவையில் இருந்து அவர் சென்னை செல்ல முயன்றார். ஆனால் கோவை சிறைக்கு முன் ரவுடி ராபினை சென்னை போலீசார் மற்றொரு வழக்கு தொடர்பாக கைது செய்தனர் . பின்னர் அவரை போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். சென்னையில் பகுஜன் ஜமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாநில அளவில் முக்கிய குற்றவாளிகளையும் ரவுடிகளையும் உடனடியாக கைது செய்ய போலீசருக்கு டிஜிபி அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக சென்னை ரவுடி ராபின் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கோவை போலீசார் தெரிவித்தனர்.