வளர் இளம் பருவத்தில் மாணவர்கள் எதிர்காலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும்.
எனவே பிரச்சனைகளுக்கான தீர்வு தேவைப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.30 லட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவிக்கவும் பள்ளிகளில் அனைத்து பகுதிகளில் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக சென்னை மாநகராட்சி அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு தளத்திலும் அமைத்து தரப்படும். முதல் கட்டமாக 2023-24 ஆம் கல்வியாண்டில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.35 லட்சம் செலவில் 70 பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் அமைத்து தரப்படும். இத்திட்டம் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்
அனைத்து சென்னை உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் செய்முறை வகுப்புகளை சிறப்பாக நடத்திட ஆய்வங்களின் உட்கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். முதற்கட்டமாக 2023-24 ஆம் கல்வியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 10 மேல்நிலை பள்ளிகளில் ஆய்வங்கள் மேம்படுத்தப்படும்.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப பள்ளிகளில் ஆய்வகங்க உட்கட்டமைப்புகள் மேம்பட வேண்டும். இது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மாநகராட்சி மேயர் ப்ரியா, பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் சென்னை மாநகராட்சிக்கு 80 புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக அந்தந்த மாமன்றங்களில் பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. சென்னை மாமன்றத்தில் மேயர் பிரியா இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதில் சென்னை மாநகராட்சிக்கு 70க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.