கோவை ஒட்டலில் ரூ.47 லட்சத்துக்கு சிக்கன் வாங்கி நூதன மோசடி..!

கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் “ஆம்பூர் சிக்கன் என்ற பெயரில் ஒட்டல் உள்ளது. .இங்கு செந்தில் மோகன் என்பவர் 2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரூ. 47 லட்சத்து 37 ஆயிரத்து 999 ரூபாய்க்கு சிக்கன் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது .இது குறித்து அந்த ஓட்டல் மேனேஜர் பால குருபரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் . போலீசார் செந்தில் மோகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..