கோவை காவல் நிலைய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை, சரவணம்பட்டி காவல் நிலைய புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் பாலகுமார் வயது 38 கோவை கணபதி பகுதியில் உள்ள வேளாண்ங்கண்ணி நகரில் மனைவி சுமதி (37), மகன் சாய் அபினவ் (11), சாய் அக்ஷதா (8) ஆகியோருடன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்து உள்ளார். இந்நிலையில், மனைவி சுமதி கடந்த 15 நாட்களுக்கு முன்பு சி 2 பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸில் உள்ள தாஜ் வின்டா ஹோட்டல் மூலமாக லண்டன் தாஜ் வின்டா ஹோட்டலுக்கு செஃப் பணிக்காக சென்று உள்ளார். குழந்தைகள் இருவரும் பள்ளி விடுமுறையில் சேலத்தில் உள்ள அவரது மாமியார் ஜெயமணி உடன் தங்கி உள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 11 மணிக்கு பக்கத்து தெருவில் குடியிருக்கும் பாலகுமார் தந்தை சண்முகம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசி எடுக்காததால் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு பாலகுமார் பணிக்கு வந்து உள்ளாரா என கேட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு பயிற்சி உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் தலைமை காவலர் மணிகண்டன் ஆகியோர் மேற்கண்ட வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்த போது படுக்கை அறையில் தொட்டில் ஊக்கில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து கதவை உடைத்து உள்ளே சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..