சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சந்திரயான் -3 இன் லேண்டர் திட்டமிட்டபடி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் நேற்று (ஆகஸ்ட் 23) தரையிறங்கியதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனைப்படைத்துள்ளது.
இந்நிலையில் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் ! சந்திராயன் -3 வெற்றி பெற்றது தமிழ்நாட்டிற்கே மட்டுமல்ல இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை தேடி கொடுத்துள்ளீர்கள்.
அதன் பின்னர் வீரமுத்துவேலுவின் தந்தையை பற்றி பேசிய முதலமைச்சர் விழுப்புரத்தில் உள்ள உங்கள் தந்தையின் பேட்டியை பார்த்தேன் அவர் ரொம்ப பெருமை பட்டிருக்கிறார் நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும் பொழுது தகவலை மட்டும் சொல்லுங்கள் நான் உங்களை சந்திக்கிறேன் மேலும் அனைவருக்கும் வாழ்த்து சொல்லும்படி கூறினார்.
இதற்கு நன்றி தெரிவித்த வீரமுத்துவேல் நீங்கள் தொலைபேசியில் அழைத்ததற்கு நன்றி எனவும் உங்களின் செயல்பாடுகள் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறினார்..