தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி இணைந்து மாபெரும் சதுரங்கப்போட்டி
தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான
மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில்மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் இணைந்து காட்டூர் ஆயில் மில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் சதுரங்கப் போட்டி நடைபெற்றது
மேலும் இந்த சதுரங்க போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் மாநகர விவசாய அணி அமைப்பாளர் குறிஞ்சி மன்னன் வரவேற்றார்.
இந்த சதுரங்க போட்டியில் 7வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் 9 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் 13 வயது குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் என சுமார் 108 பள்ளி குழந்தைகள் இந்த சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டனர். ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநகர செயலாளர் மண்டல குழு தலைவருமான மதிவாணன் மாநகர கழக பொருளாளர் தமிழ்செல்வன் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள் .மேலும் இந்த சதுரங்க போட்டியில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் சங்கர், ஜெய் கணேஷ் ,அந்தோணி தேவதாஸ், மேலும் மாநகர விவசாய அணி தலைவர் குமார்,மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மற்றும் மாநகர தொழிலாளர் அணி தலைவர் ராஜவேல் மாநகர தொழிலாளர் அணிதுணைத் தலைவர் நாகரத்தினம் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருச்சியில் தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா சதுரங்கப் போட்டி..!
