பிரதமர் மோடி பேசியதன் பின்னணியை புரிந்து கொள்ளாமல் பேசும் முதல்வர் – அண்ணாமலை கருத்து .!!

சென்னை: ஒடிசா மாநிலத்தில் பிரதமர் பேசியதன் பின்னணியை முதல்வர்ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை என தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொய் சொல்வதையே முழு நேர வேலையாக வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களை அவமதித்து பிரதமர் பேசியதாக மற்றொருபொய்யை சொல்லியிருக் கிறார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை யாராலும் சந்திக்க முடியாது. தலைமைச் செயலர்,டிஜிபி, அமைச்சர்கள் எனயாராக இருந்தாலும் முதல் வரை சந்திக்க தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் தான்அனுமதி கொடுப்பார். ஒடிசாவின்அரசியல், ஒடிசாவை சாராத ஒருவர்அம்மாநில அரசை இயக்குவதா. இங்கு முதல்வருக்கு பிடித்த வேறுமாநிலத்தைச் சேர்ந்த ஒருஐஏஎஸ் அதிகாரி, அவர் பதவியை ராஜினாமா செய்து திமுகவில்இணைந்தால் அவரை திமுகவின்முகம்என முதல்வர் சொல்வாரா. அவரை முதல்வர் வேட்பாளராக திமுக அறிவிக்குமா. ஆனால் அங்கு நவீன் பட்நாயக் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.

அது தவறுதானே. அந்தந்தமாநிலத்தின் அரசியல் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரி ஜெகந்நாதர் கோயில் கருவூலத்தின் சாவி காணாமல் போய்விட்டது. அதற்கு பொறுப்பு யார். சொல்லப் போனால் அங்கு முதல்வரே வி.கே.பாண்டியன் தானே. இதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மண்ணின் மைந்தர் என பேசும் நிலையில், ஒடிசாவில் மட்டும் தனிநியாயமா. இதில் பிரதமர் பேசியது எப்படி தவறாகும்?

பிரதமருக்கு தமிழர்கள் மீது அளவற்ற அன்பு, மதிப்புஇருக்கிறது. அதற்காக தமிழர்களை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்று முதல் வராக்க முடியுமா? எனவே, முதல்வர் பொய் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மீது பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், ”இண்டியா கூட்டணியின் தோல்வியை மறைக்க பிரதமர் பேசாத வார்த்தைகளை திரித்துஅவதூறு கூறும் குற்றச்சாட்டுகளை முதல்வர் தவிர்த்திருக்க வேண்டும். மேலும் தமிழர்களுக்கும் ஒடிசா மக்களுக்கு மான நல்லுறவுக்கும், பிரதமர் தமிழர்கள் மீது கொண்டுள்ள பற்றுக்கும் தமிழக முதல்வர் எதிர்மறையான கருத்தை தெரிவிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.