குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி..!

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி. கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது..

கோவை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உறுதி மொழியை படித்தார்..அதில் கூறியிருப்பதாவது :-இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரைபாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன்.இவ்வாறு அந்த உறுதிமொழி யில் கூறப்பட்டிருந்தது.இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர்கள் சண்முகம்,சுகாசினி,நுண்ணறி பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ஆனந்த் ஆரோக்கியராஜ் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்கள் பங்கேற்றனர்.