கோவை பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – யோகா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

கோவை வடவள்ளி அடுத்த கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (54). இவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் ஓவியம் மற்றும் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி யோகா மற்றும் ஓவிய பயிற்சிக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் நேற்று 2 மாணவிகளிடம் அவர் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிகள் இது குறித்து பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பள்ளியின் முதல்வர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார் . அப்போது யோகா ஆசிரியர் ராஜன் ஏற்கனவே இது போல தொடர்ந்து பாலியல் சில்மிஷம் செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பள்ளியின் முதல்வர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் யோகா ஆசிரியர் ராஜனை போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்..