பெட்டிக்கடைகளில் சிகரெட் விற்பனை – வியாபாரிகள் கைது..!

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் தடையை மீறி சிகரெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவில்பாளையம் மரக்கடை வீதியைச் சேர்ந்த சூர்யா ( வயது 21) கைது செய்யப்பட்டார். சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது .

இதே போல துடியலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சிகரெட் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக துடியலூர் ரயில் நிலையம் ரோட்டை சேர்ந்தவியாபாரி சித்திரவேல் ( வயது 62 )கைது செய்யப்பட்டார்..