பள்ளிக்கூடம் நடத்துவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த பெண் கைது

கோவை காந்திபுரம் 7-வது வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 38 )இவருக்கு சாயி பாபா காலனி கே.கே. புதூர் சர்ச் ரோட்டை சேர்ந்த செந்தில் மனைவி மாலதி ( வயது 47) என்பவர் அறிமுகமானார். அவர் பிரியா என்ற பெண்ணை முத்துக்குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்.ஆர் எஸ் புரத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடம் நடத்துவதாக கூறிபள்ளிக்கூட அபிவிருத்திக்காக முத்துக்குமாரிடம் ரூ 10 லட்சம் பணம் வாங்கினார் களாம். பின்னர் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து முத்துக்குமார் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாலதியை நேற்று கைது செய்தனர். இவர் மீது மோசடி உட்பட 2பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.