சூலூரில் கோஷ்டி மோதல் : ஐடி ஊழியர் கொலை – 5 பேர் கைது..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள் .விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் லூகாஸ் செல்வின் என்பவரது மகன் சாமுவேல் ( வயது 21) என்பது தெரிய வந்தது இவர் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இது தொடர்பாக போலீசார் பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த சுஜித் (வயது 28) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதன் விவரம் வருமாறு:- சாமுவேல் மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோர் தலைமையில் 5 மேற்பட்டவர்கள் ஒரு கோஷ்டியாக இருந்துள்ளனர். பரத், நவீ ன் ,ஜெயக்குமார், பிரனேஷ் ஆகியோர் ஒரு கோஷ்டியாக இருந்துள்ளனர். இதில் சுஜித் கோஷ்டி யினர் தனியாக செல்வோரை அடித்து பணம் ‘செல் போன் பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர் .இதை சாமுவேல் மற்றும் அவரது நண்பர்கள் கண்டித்தனர். இதனால் அந்த இரு கோஷ்டிகளிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுஜித் கோஷ்டி சமாதானம் செய்வது போல் சாமுவேல், ஆகாஷை அழைத்துள்ளனர். அதை  நம்பி சென்றபோது அவர்கள் இடையே மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சுஜித் கோஷ்டியை சேர்ந்த சாமுவேல், ஆகாசை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார் . அப்போது ஆகாஷ் தப்பி சென்று விட்டார். தாக்கியதில் படுகாயம் அடைந்த சாமுவேல் பரிதாபமாக இறந்தார் . இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜித், பரத், நவீன், ஜெயக்குமார், பிரனேஷ் ஆகியோரை இன்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..