கார் வியாபாரத்தில் மோதல் : 2 பேருக்கு கத்திக்குத்து..!

கோவை கரும்புக்கடை,ஆசாத் நகர் எம்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்தவர் ஜெய்லாபுதீன் ( வயது 55) மர வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியைச் சேர்ந்த கே. எம் . லிபு ( வயது 45 )என்பவர் அறிமுகமானார்..அவர் அவருக்கு தெரிந்த குனியமுத்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்த ஷாஜகான் என்பவரை ஜெயிலிலா புதினுக்குஅறிமுகம் செய்து வைத்தார்.இவர்களில் கே எம் லிபு டெல்லியில் இருந்து கார் வாங்கி வந்து கேரளாவில் விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார். இதை நம்பி ஜெய்லாபுதீன் அவர்களிடம் பங்கு சேர்ந்தார் . இதற்காக ரூ 20 லட்சத்தை வியாபாரத்திற்காக கொடுத்திருந்தார். அதில் ரூ 5 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர்.கார் வியாபாரம் எதுவும் செய்யவில்லை.இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறு ஜெயிலபுதீனை இருவரும் சேர்ந்து மிரட்டி, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர் .இதில் படுகாயம் அடைந்த ஜெயிலாபுதீன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து கேரளாவைச் சேர்ந்த கார் வியாபாரி கே .எம் .லிபு (வயது 45) குனியமுத்தூர்ஷாஜகான் (வயது52) ஆகியோரை கைது செய்தார் .இவர்கள் மீது கொலை முயற்சிஉள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த கே.எம்.லிபு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் ஜெயிலாபுதீன் தன்னை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார் இது தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்ஜெய்லா புதீன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.