கோவை மத்திய சிறையில் காவலர்கள் மோதல் – ஒருவர் படுகாயம்..!

கோவை மத்திய சிறையில் முதல் நிலை காவலர்களாக வேலை பார்த்து வருபவர்கள் பிரசாந்த் ( வயது 37) ரியாஸ்கான் (வயது 32) இவர்கள் இருவரும் மத்திய சிறை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இருவரும் மத்திய சிறையில் உடல்நலம் சரியில்லாத கைதிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஒட்டி வருகிறார்கள்.இவர் கடந்த 14ஆம் தேதி சிறையில் இருந்து உடல் நலம் குன்றிய ஒரு கைதியை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றார் .அப்போது சிறை கட்டுப்பாட்டு அறையில இருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது . அதில் உடனடியாக சிறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது சிறை காவலர் ரியாஸ் கானிடம் உங்கள் இருசக்கர வாகனத்தில் போய் அழைத்து வாருங்கள் என்று கூறினாராம். அதற்கு ரியாஸ்கான் மறுத்துவிட்டார்.பிறகு பிரசாத் சிறைக்கு திரும்பினார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சிறைக் காவலர் ரியாஸ் கான் பிரசாந்திடம் தகராறு செய்தாராம் . பின்னர் அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறை காவலர் பிரசாந்துக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பிரசாந்த் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சிறை காவலர் ரியாஸ் கான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .இவர் மதுரை பக்கம் உள்ள மண்குளம்,பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் ஆவார்.இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.