சென்னை: நிலக்கரி விற்பனை ஊழல் தொடர்பாக அதானி மீது விசாரணையை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியது.
தரமற்ற நிலக்கரியை சந்தை விலையை விட அதிகமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்றதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. ரூ.6600 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் புகாரின் விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதானி மற்றும் ஊழலில் தொடர்புடையவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.