கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள ஆர் எம் .புதூர் பெரியவாய்க்கால்மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 58) சண்முக சுந்தரம் (வயது 23) ரமேஷ்குமார் ( வயது 34) கணேஷ் (வயது 47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட 2 சேவல் பணம் ரூ.500 மற்றும் அவர்களது 3 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
இதே போல பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டி பகுதியில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பிரதீப் (வயது 32 )கதிர்வேல் ( வயது27) தினகரன் (வயது 38) அரவிந்தன் (வயது21) தமிழ்ச்செல்வன் (வயது 30) பரதன் (வயது23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்’ 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட 3 சேவல் பணம் ரூ 700 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது..