கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூ (வயது 22). ஓட்டல் உரிமையாளர். இவர் தனது காரை அடகு வைத்து கோவையை சேர்ந்த அசர்(28) என்பவரிடம் ரூ. 95 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் சில நாட்கள் கழித்து அசர் வங்கி கணக்கில் அசலுடன் சேர்த்து ரூ. 1,12,500 பணத்தை ஆண்ட்ரூ செலுத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தனது காரை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அசர் காரை கொடுக்க மறுத்தார். இது குறித்து ஆண்ட்ரூ ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் அசர் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.