கோவை பேருந்து நிலையத்தில் நர்சிடம் சில்மிஷம் – ஓட்டல் ஊழியர் கைது..!

கோவை:தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். திருமணமானவர். அங்கு நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று கோவை திரும்பினார். இதையடுத்து ஈசா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் இளம்பெண்னிடம் சில்மிசம் செய்து தவறாக நடக்க முயன்றார் .இது குறித்து அந்த பெண் காட்டூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சில்மிஷம் செய்தவரை கைது செய்தனர். விசாரணையில் இவர் பாலக்காட்டைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 40) என்பதும் ,கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..