கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள எஸ்.என்.வி கார்டனை சேர்ந்தவர் பாலச்சந்திரன். தொழிலதிபர் .இவர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இவரை பார்ப்பதற்காக இவரது மகன் முகுந்த் சந்திரன் (வயது 23) வீட்டை பூட்டிவிட்டுமருத்துவமனைக்கு சென்றிருந்தார். தந்தைக்கு உதவியாக இரவில் மருத்துவமனையில் தங்கினார். நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள் ,பணம் ரூ.60 ஆயிரம், 3 கிலோ எடை கொண்ட 3 வெள்ளி பிளேட், 2கேமிரா,கார் சாவி ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து முகுந்த் சந்திரன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபாதேவி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.வீட்டில் கதவு, பீரோவில் பதிந்து இருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவை தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, பணம் ,வெள்ளி பொருட்கள் கொள்ளை..!
