கோவை கத்தோலிக்க ஆலயத்தில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு – வாலிபர் கைது..!

கோவை ராமநாதபுரம் திருச்சி ரோடு சந்திப்பில் புனித ட்ரினிட்டி கத்தோலிக்க ஆலயம் உள்ளது . இங்குள்ள மாதா சிலை முன் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்து 2000 ரூபாய் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஆலய செயலாளர் ஜெய்சன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம், முனைஞ்சிபட்டியை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஈனமுத்து ( வயது 30) என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து 580 ரூபாய் மீட்கப்பட்டது..