கோவை பீளமேடு, ஜீவா நகர் 3 -வது வீதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 37) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 18 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பல்லடத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் ரூ1 லட்சத்து ,50 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சுரேஷ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மரிய முத்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.பீரோவில் பதிந்திருந்த கொள்ளைகளின் 4 கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.