கஞ்சா விற்ற கோவை கல்லூரி மாணவர் மற்றும் பெண் உள்பட 4 பேர் கைது..!

கோவை : பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் நேற்று அங்குள்ள வஞ்சியாபுரம் பிரிவில் ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பிடித்து சோதனை செய்தார் .அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கிணத்துக்கடவு பக்கமுள்ள நல்லட்டி பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சூரிய பிரகாஷ் (வயது 19) என்பது தெரியவந்தது .இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதேபோல பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அங்குள்ள பெட்டதாபுரம் ஆர்ச் அருகே நடத்திய சோதனையில் கஞ்சா விற்றதாக நீலகிரி மாவட்டம் கூடலூர் திருவள்ளூர் நகரத்தை சேர்ந்த பிரதிப் (வயது22) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேட்டுப்பாளையம் போலீசார் அங்குள்ள ஒரு பேக்கரி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்ததாக மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டைச் சேர்ந்த பிரசாந்த் ( வயது 19) என்பவரை கைது செய்தனர் .அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் ஊஞ்சவேலம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது கஞ்சா விற்றதாக சூலூர், செஞ்சேரி குமாரபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி சாந்தலட்சுமி (வயது 59) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.