கோவை : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் இவரது மகன் விக்னேஷ் (வயது 22) இவர் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். மேலும் இவர் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பகுதி நேர தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் கோவையில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து விக்னேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை தனது சொந்த ஊருக்கு கடத்திச் சென்றார். அங்கு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதற்கிடையில் அந்த மாணவியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மனைவியை விக்னேஷ் தனது சொந்த ஊருக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் திருத்துறைப்பூண்டி சென்று விக்னேசை நேற்று கைது செய்தனர். நர்சிங் மாணவி மீட்கப்பட்டார்..