கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், தேவாங்கு நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கீர்த்தனா ( வயது 21) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி கீர்த்தனாவை அவரது தந்தை சிவக்குமார் கல்லூரியில் கொண்டு போய் விட்டு விட்டு வீட்டுக்கு வந்தார் .பின்னர் கீர்த்தனாவுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.அவரது செலபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கீர்த்தனா எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து தந்தை சிவக்குமார் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.