கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை அருகே உள்ள பட்டணம், வெள்ளலூர் ரோட்டில் உள்ள சபரி கார்டனை சேர்ந்தவர் கதிரவன் .இவரது மகள் கன்னிகா ( வயது 18) இவர் காளப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ . முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை கதிரவன் பீளமேடுபோலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.