கோவை உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் மத போதகர் பிரின்ஸ் கால்வின் ஒரு சமூகத்துக்கு அவதூறு ஏற்பாடு வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. அதன் பெயரில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது 4 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது ஆலய உறுப்பினர் ஜோஸ்வா டேனியல் புகார் கொடுத்தார். அதில் ஆலய வழிபாட்டில் பிரின்ஸ் கால்வின் பேசியது இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும் இரு மதத்தினரின் நல்லுறவை சீர் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..