செக் மோசடி வழக்கில் கோவை பல் டாக்டருக்கு 6 மாதம் சிறை தண்டனை.!!

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் . மில் அதிபர். இவரிடம் பீளமேட்டைச் சேர்ந்த பல் டாக்டர் சங்கீத் (வயது 37) என்பவர் கடந்த 2015 டிசம்பர் 3 -ஆம் தேதி , 15லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.சில நாட்கள் கழித்து பணத்தை திருப்பி கேட்ட போதுபணம் இல்லாததால் கிருஷ்ண குமாருக்கு காசோலை வழங்கினார்.அந்த காசோலைக்கு வங்கியில் பணம் இல்லாததால்திருப்பி வந்தது.இது குறித்து கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா குற்றம் சாட்டப்பட்ட சங்கீதிற்கு 6 மாதம் சிறை தண்டனையும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும்உத்தரவிட்டார்.