கோவை டி.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்.!!

கோவை திருப்பூர், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 போலீஸ்துணைசூப்பிரண்டுகள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்துள்ளார். அதன் படி கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த சுரேஷ்குமார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ,சப் டிவிஷன் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதே போல கோவை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஜனனி பிரியா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.