கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் உள்ள மகாத்மா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36) இன்ஜினியர். இவர் வாட்ஸ் அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அதில் “மைண்ட் சேர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இந்தியா”நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக கமிஷன் தருவதாக கூறப்பட்டிருந்தது. இதை நம்பி சதீஷ்குமார் ரூ 5 லட்சத்து 2 ஆயிரத்து 222 வங்கி மூலம் செலுத்தினார். அவருக்கு கமிஷனும் லாபத்தொகையும் வரவில்லை. பின்னர் தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை .இது குறித்து சதீஷ்குமார் கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..