கோவை இன்ஜினியரின் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு – வாலிபர் கைது..!

கோவை குனியமுத்தூரில் உள்ள வெற்றிலை கார வீதியைச் சேர்ந்தவர் ரகுவரன் ( வயது 39) இன்ஜினியர் .இவர் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இரவில் அதற்கு யாரோ தீ வைத்து விட்டனர் . இதில் பைக் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமார் என்பவரை கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..