கோவை பைனான்ஸ் அதிபரிடம் ரூ.14.50 லட்சம் மோசடி..!

கோவை அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் சபரி ( வயது 30) பைனான்ஸ் அதிபர். இவருக்கு பகுதி நேர வேலை இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது.இதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்று கூறினார்கள்.இதை நம்பிய சபரி அவர்கள் அனுப்பிய வங்கி கணக்குக்கு முதலீடாக பணம் அனுப்பினார். முதலில் ரூ 10. ஆயிரம் முதலீடு செய்தார். அதற்கு லாபத் தொகையாக ரூ. 2 ஆயிரம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு தவணைகளில் ரூ. 14 லட்சத்து 53 ஆயிரம் அனுப்பி வைத்தார் .அதன் பின்னர் எந்த லாபமும் வரவில்லை.கொடுத்த பணத்தையும் திருப்பி வரவில்லை. அதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண், சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.