கோவை தீயணைப்பு நிலைய ஊழியர் தற்கொலை..

கோவை சுந்தராபுரம், குறிச்சி, அண்ணா நகர். சில்வர் ஜூப்ளி வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55 )இவர் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு – மீட்பு நிலைய அலுவலகத்தில் இள உதவியாளராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 6 மாதமாக இவர் வேலைக்குச் செல்லவில்லை .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் படுக்கை அறையில் மின் விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி ஜெயக்கொடி போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.