கோவை குறிச்சி அருகே உள்ள மாச்சம் பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ பள்ளிக்கூட வகுப்பறையின் பூட்டை உடைந்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், சிபியூ -யூ.பி.எஸ். ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கவிதா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.