கோவை அரசு பள்ளிக்கூட ஆசிரியையிடம் கத்தி முனையில் 5 பவுன் செயின் பறிப்பு..!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே புதூர, சாரதா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 59) அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு டியூசனுக்கு சென்ற தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஜெயா நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்களில் பின்னால் இருந்தவர் இறங்கி வந்து ரேணுகா தேவி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்தார்.அதை ரேணுகாதேவி தடுக்க முயன்றார்.அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் அந்த ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து ரேணுகாதேவி குனியமுத்தூர் போலீஸ் புகார் செய்துள்ளார் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 ஆசாமிகளை தேடி வருகிறார்.