கோவை ஓட்டல் மேனேஜர் செயின் திருட்டு..!

கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் ஜெயபிரகாஷ் வயது 45 ) இவரது ஒட்டல் உரிமையாளர் மனைவிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது, இதனால் ஜெயபிரகாஷ் அவரை அழைத்துக் கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த நகைகளை வாங்கி அவரது வீட்டில் வேலை செய்து வரும் மீனாவிடம் கொடுத்து இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் கொடுத்த பையில் இருந்த 3 பவுன் நகைகளை காணவில்லை .இது குறித்து ஜெயபிரகாஷ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.