கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பி. வி. எம். சுதா கார்டனை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சுஷ்மிதா ( வயது 27) இவர் தற்போது வெள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருகிறார். சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் . அப்போது இவருக்கும் திருப்பூர் மாவட்டம் ,அவிநாசி பக்கம் உள்ள தெக்கலூர் ,சமத்துவ புரத்தைச் சேர்ந்த அருள் பிரகாஷ் (வயது 30) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. பின்பு இது காதலாக மாறியது .இந்த நிலையில் அருள் பிரகாசுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது சுஷ்மிதாவுக்கு தெரிய வந்தது. பிறகு அவருடன் உள்ள நட்பை துண்டித்து கொண்டார். இந்த நிலையில் அருள் பிரகாஷ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினாராம்.இதை சுஷ்மிதா நம்பவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அருள் பிரகாஷ் சுஷ்மிதாவின் செல்போனை வாங்கி உடைத்துள்ளார். பின்னர் அவரை இரும்பு கம்பியால் சர மரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் சுஷ்மிதா படு காயம் அடைந்தார் .அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் லதா ,சப் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர்வழக்கு பதிவு செய்து அருள் பிரகாசை தேடி வருகிறார்கள்.
கோவை ஐடி பெண் அதிகாரியை காதலித்து கொலை மிரட்டல் – காதலன் மீது வழக்குபதிவு..!
