கோவை வக்கீல் காரில் கடத்தி கொடூர கொலை – 4 பேர் காவல் நிலையத்தில் சரண்.!!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள செந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 48) வக்கீல். இவரது மனைவி நித்திய வள்ளி. தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று காலையில் வீட்டிலிருந்த உதயகுமார் தனது மனைவியிடம்பொள்ளாச்சி செல்வதாக கூறி விட்டு காரில் சென்றார். அவர் செல்லும் வழியில் மரம ஆசாமிகள் சிலர் அவரது காரில் ஏறிச் சென்றதாக தெரிகிறது .இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் மயிலேறிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே சென்றபோது காரில் சென்ற மர்ம ஆ சாமிகள் திடீரென்று காரை நிறுத்தி, அவரை கீழே இறங்கச் செய்துள்ளனர். பின்னர் உதயகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர் .அதில் அவரது தலை,கழுத்து, மார்பு ஆகிய இடத்தில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை அங்கேயே போட்டு விட்டு அந்த ஆசாமிகள் அவரது காரைஎடுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.இது குறித்து செட்டிபாளையம் போலீசுக்குதகவல் தெரிவிக்கப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேரில் சென்று பார்வையிட்டார். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். உதயகுமாரை கொலை செய்தது யார் ?எதற்காக கொலை நடந்தது? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது தொடர்பாக 4 பேர் காவல் நிலையத்தில் நேற்று இரவு சரண் அடைந்துள்ளனர்.அவர்களை செட்டிபாளையம் போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ரத்தினபுரி அய்யனார் என்ற செல்வம் ( வயது 26. )கணபதியை சேர்ந்த கவுதம் என்ற விருமாண்டி ( வயது 20)நல்லாம்பாளையம், அருண்குமார் ( வயது 26)சங்கனூர் (அபிஷேக் ( வயது 20)என்பது தெரியவந்தது.அய்யனார்என்ற செல்வம் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாகவும் ,|அவரிடம் வக்கீல் உதயகுமார் ரூ 40 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த அய்யனார் என்ற செல்வம் தன்னுடைய பைனான்ஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கும்விருமாண்டி, அருண்குமார், அபிஷேக், ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை நடத்தி இருப்பது தெரியவந்தது கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.