கோவை: சட்டசபை மரபை மீறி செயல்பட்ட கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்தும் ,அவர் பதவி விலக கோரியும் கோவை நீதிமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணியை சேர்ந்த முற்போக்கு கூட்டணி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .இதில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் கவர்னருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் மூத்த வழக்கறிஞர்கள் அருள்மொழி ,தண்டபாணி, சுந்தரமூர்த்தி, சிவஞானம் , தமிழ்ச்செல்வி .ஜோதிபாசு ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.