கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணபால் .இவரது மகன் சானபால் (வயது 21) இவர் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த 7-ந்தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவில் இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து இவரது தயார் அனிதா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
கோவை மருத்துவ மாணவர் திடீர் மாயம்..!
