ரவுடிகளின் 5 ஆண்டு கால பின்னணி குறித்து ஆய்வு – கோவை காவல்துறை அதிரடி..!

கோவையில் கடந்த மாதம் அடுத்து அடுத்து இரண்டு கொலைகள் நடைபெற்றன. இதில் கொலை செய்யப்பட்ட இருவரும் ரவுடிகள் என்பதுடன் அவர்களை மற்றொரு ரவுடி கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாநகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பெயர் பட்டியலை தயார் செய்யப்பட்டது. இதில் முக்கிய ரவுடிகள் 60 க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள ரவுடிகளின் 5 ஆண்டு கால குற்ற வரலாறு குறித்து ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது :-

கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் குற்ற வழக்குகள் தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில் குற்றங்களில் எண்ணிக்கை கைது செய்யப்பட்டவகளின் விபரம், அவர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த நிலையில் கோவை மாநகரில் உள்ள ரவுடிகளின் கடந்த 5 ஆண்டு கால பின்னணி குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ம் ஆண்டு வரை உள்ள 5 ஆண்டுகளில் ரவுடிகளின் பின்னணிகளை சேகரிக்க அறிவுறுத்துப்பட்டு உள்ளது.

மேலும் அப்போது ரவுடியாக வலம் வந்தவர்களை தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து ரவுடிகளாக வலம் வருகிறார்களா ? சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்களா ? உயிருடன் உள்ளார்களா ? திருந்தி வாழ்த்து வருகிறார்களா ? என்பது குறித்து விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் அவர்களை சந்திக்க வரும் நபர்கள். அவர்களின் பின்னணி வேறு யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை சேகரிக்கபட்டு வருகின்றன. இவ்வாறு கூறினார்.