கோவை மாவட்டம் கோட்டைப்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் பிரியதர்ஷினி(23). இவர் கல்லூரியில் படிக்கும்போது, அமனுதீன் என்பவரை காதலித்துள்ளார். அமனுதீன் பெற்றோரின் சம்மதத்துடன், பிரியதர்ஷினியை மதம்மாற்றி மதினா என்ற பெயருடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வேலை நிமித்தமாக திருப்பூரில் தங்கியிருந்த போது 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததையடுத்து அமனுதீன் வீட்டிற்கு வருவதில்லை என மாமனார் ஜாஹீர் உசைன்,மாமியார் ஹம்ரூன் நிஷா ஆகியோரிடம் சொன்னபோது வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளனர். காவல் நிலையத்தில் புகாரளித்து விடுவேன் என பிரியதர்ஷினி கூறியதையடுத்து, கணவர் அமனுதீன் வீட்டிற்கு வருவதை மூன்று மாதமாக நிறுத்திவிட்டார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெனாசீர் என்ற திருமணமான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து, அமனுதீன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அமனுதீனுடன் பெனாசீர் இருப்பதை பார்த்த அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டதால், உனது கணவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இனிமேல் நீ வீட்டிற்கு வந்தால்,ஜமாத் ஆட்களை வைத்துகொலை செய்துவிடுவதாக பெனாசீர் மிரட்டியுள்ளார். ஒரு லட்ச ரூபாய் வாங்கிவிட்டு, பிரிந்துவிடும்படி ஜமாத்தினர் பிரியதர்ஷினியிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் பிரியதர்ஷினி என்கிற மதினா, தன்னை வரதட்சண கேட்டு கணவர், மாமனார்,மாமியார் கொடுமைப்படுத்துவதாகவும், பெனாசீர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி புகாரளித்துள்ளார். விசாரணைக்கு அழைத்த காவல் ஆய்வாளர் ஒரு லட்சம் வாங்கிவிட்டு போகும்படி மிரட்டியுள்ளார். தனக்கும், குழந்தைக்கும் பாதுகாப்பு அளித்து லவ்ஜிகாத் என்கிற பெயரில், தன்னை ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.