கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று மாவட்ட போலீசார் பயன்படுத்தும் கார் வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலை குறித்த ஆய்வு நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலந்து கொண்டு அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் வாகனங்களில் உள்ள ஜாக்கி, கயிறு உள்ளிட்ட உபகரணங்களையும் ஆய்வு செய்தார்.. இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திரகுற்ற தடுப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்ரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பேசும்போது :-திருட்டு, வழிப்பறி மற்றும் போதை பொருட்கள் விற்பனை போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்த போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்..
கோவை போலீஸ் வாகனங்கள்… எஸ். பி. கார்த்திகேயன் நேரில் ஆய்வு.!!
