கோவை தனியார் நிறுவன அதிகாரிக்கு பீர் பாட்டில் குத்து..!

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜ்குமார், இவரது மகன் சுடர் மணி (வயது 27) இவர் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தனது பெற்றோர்களை பார்க்க கோவைக்கு வந்திருந்தார். நேற்று தனது நண்பர் ஸ்ரீநாத் மற்றும் அவரது வீட்டில் வளர்த்த நாயுடன் அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த பூபதி (வயது 25) என்பவர் நாயை கல்லால் தாக்கினார்,இதை சுடர்மணி கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த பூபதி பீர் பாட்டிலால் சுடர் மணியை குத்தினார்.இதில் படுகாயம் அடைந்தார்.சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சுடர்மணி மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.