கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சண்முகா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதை உக்கடத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (வயது 42) என்பவர் வாடகைக்கு எடுத்து ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் நடத்தி வந்தார்.இந்த அலுவலகத்துக்கு கடந்த 17-ந்தேதி இரவு யாரோ 4 மர்ம ஆசாமிகள் வந்தனர் .அவர்கள் திடீரென்று பெட்ரோல் ஊற்றிஅலுவலகத்துக்கு தீ வைத்தனர்.. இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்தி .சிவராஜ் ஆகியோர் பார்த்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனையில் சிக்கந்தரின் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்துக்கு 4 பேர் தீ வைத்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பாஜகவை சேர்ந்த மணியக்காரன் பாளையம் ரமேஷ் (வயது 34) வீரகேரளம் சபரி கிரிவாசன் ( வயது 35) ராமநாதபுரம் அயோத்தி ரவி (வயது 43 )உஸ்மான்( வயது 37) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-.சிக்கந்தர் தனது நண்பர் உஸ்மானிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதை அவர் திருப்பி கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிக்கந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உஸ்மானை தாக்கி உள்ளார். இதனால் உஸ்மான் தன்னை தாக்கிய சிக்கந்தரை பழி வாங்குவது குறித்து தனது நண்பர்கள் ரமேஷ், சபரி கிரிவரசன், அயோத்தி ரவி ஆகியோரிடம் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 17ஆம் தேதி அவர்கள் 4 பேரும் சேர்ந்து சிக்கந்தர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பிச் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் 4 பேரும் கைதாகி உள்ளனர்..இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..